Posts

அச்சமா? அவிசுவாசமா?

🤔 *ஊழியம் வளர வாய்ப்பே இல்லையா?*  ஒருவிசை "புதிய ஏற்பாட்டு சபை விசுவாசிகளுக்கு தசமபாகம் கொடுக்கவேண்டும் என்கிற கட்டளை எதுவும் இல்லை" என்று அடியேன் எழுதிய ஒரு பதிவை கண்ட தேவஊழயர் ஒருவர், என் நெருங்கிய நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு, தசமபாகத்திற்கு எதிராக எதுவும் எழுதவேண்டாம் என்று என்னிடத்தில் சொல்லும்படி அவரை கேட்டுக்கொண்டார். மேலும், *ஊழியம்  வளர, சுவிசேஷம் அறிவிக்க, சபைகளை ஸ்தாபிக்க, சபைக்கான இடங்களை வாங்க, சபைகளைக் கட்ட, உடன் ஊழியர்களை  தாங்க, தசமபாம் கட்டாயம் கொடுக்கவேண்டும்! தசமபாகம் இல்லாமல் இவைகளை செய்யமுடியாது* என்று அவர் பத்திரிக்கையில் எழுதியிருந்ததையும் அடியேன் காணநேர்ந்தது! தசமபாகத்தைக் கொண்டுதான் ஊழியம் வளரவேண்டும், சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும்டும், சபைகளை ஸ்தாபிக்கவேண்டும், சபைக்கான இடங்களை வாங்கவேண்டும், சபைக்கான கட்டிடங்களைக் கட்டவேண்டும், உடன் ஊழியர்களைத் தாங்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறாரா? *ஊழிய அழைப்பு, அழைப்புக்கேற்ற கிருபை, தேவவல்லமை, வரங்கள்,  கிருபைகள் மற்றும் வரங்களைப் பெற்ற விசுவாசிகளின் ஊழியம், தேவஜனங்களின் காணிக்கை மற்றும் பொருளாதார ஒத

ஆதாயம் என்னும் பலிபீடத்தில்...!

🤔 *இனி பிரச்சனையே இல்லையா?*                  ................. இயேசுவின் இருதயத்தைக் கொண்டிருந்த ஆதிசபை ஊழியர்கள், *"உங்கள் தரித்திரமும் கடன் பிரச்சனையும் மாறவேண்டுமானால், எவ்வளவு கஷ்டத்திலும் காணிக்கை தசமபாகத்தை சரியாய் கொடுத்துவிடுங்கள்"* என்று ஏழை விசுவாசிகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிராமல், *இருக்கிற விசுவாசிகள் இல்லாத விசுவாசிகளுக்கு கொடுத்து, குறைவுகளை நிறைவாக்க உபதேசித்தார்கள்!* (அப்.2:42,44,45; 4:32,34,35; ரோமர் 12:13; கலாத்.6:10; 1தீமோத்.6:17-19; யாக்.1:27; 2:15,16; 1யோவான் 3:16-22) நமக்கு இயேசுவின் சிந்தை இருக்கிறதா?                .................. இப்படி அடியேன் எழுதியிருந்த பதிவை படிக்கநேர்ந்த ஒருவர் சென்னையிலிருந்து என்னை அழைத்து, ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய சபையைச் சேர்ந்தவராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, *"நீங்க தசமபாகத்திற்கு எதிராக எழுதியிருக்கிறதுபோல தெரிதே? தசமபாகம் கொடுக்குற மாசம் முழுசும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம, ரொம்ப ஆசீர்வாதமா இருக்கிறேன். தசமபாகம் கொடுக்காத மாசத்துல படற  கஷ்டம் இருக்கே! அதனால, எந்த பிரச்சனையும் இல்லாம ஆசீர்வாதமா இருக

ஏழைகளுக்கு எதிரானவர்களை தேவன் எப்படி அணுகுகிறார்? பகுதி 4.

👉🏿 *ஏழைகளுக்கு எதிரானவர்களை தேவன் எப்படி அணுகுகிறார்?*                 (பகுதி-4) 🧐 ஏழைகளைக் கொள்ளையிடுகிறவர்களின் பிராணனை கர்த்தர் கொள்ளையிடுவார்! *ஏழையாயிக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே!* சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.               நீதிமொ.22:22 கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, *அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.*               நீதிமொ.22:23 என்று ஒரு அரசனே எச்சரிக்கிறதைப் பாருங்கள். தங்கள் பணபலம், ஆள்பலம்,  அதிகாரபலம் இவைகளை நம்பி, "நம்மை எவன் கேட்பான்" என்கிற ஆணவத்தில் ஏழைகளின் நேரத்தை, உழைப்பை, வருமானத்தை,  வாய்ப்பை, வாழ்வை கொள்ளையிடுகிறவர்களையும், சிறுமையானவர்களை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்துகிறவர்களையும் தேவன் விசாரிக்கும் நாள் நிச்சயம் வரும். ஏழைகளுக்காகவும் சிறுமையானவர்களுக்காகவும் வழக்காட ஒருவரும் முன்வராததால், கர்த்தரே அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனை ஒருநாள்  கொள்ளையிடுவார்!  *ஏழைகளை கொள்ளையிடுகிற, சிறுமையானவர்களை உபத்திரவப்படுத்துகிற எவரும் மனுஷரிடம் தப்பினாலும் தேவனிடம் தப்பமுடியாது

வரிகளுக்குப் பொருத்தமானவர்களா?

நேற்று போதகர் தினத்திற்காக வாழ்த்து பதிவிட்டிருந்த ஒருவர், *"PASTOR"* என்கிற வார்த்தைக்கு: *P* - Preaching God's       word   *A* - Advisor by God's      grace *S* - sacrifice to God *T* - Transforming          lives into God *O* - Organising       meetings. *R* - Role model to all       like God என்று விளக்கமளித்திருந்தார். இன்று உண்மையிலேயே ஒரு பாஸ்டர்: *தேவ வார்த்தையை உள்ளபடியே  பிரசங்கிக்கிறவராக....*  *தேவகிருபையால்  சத்தியத்தின்படி சரியான ஆலோசனை கொடுக்கிறவராக....*  *தேவனுக்காக தியாகம் செய்கிறவராக....*  *தேவனுக்குள் ஜீவியத்தை மறுரூபப்படுத்துகிறவராக....*  *பக்திவிருத்திக்கான கூட்டங்களை ஒழங்கு செய்கிறவராக....*   *இயேசுகிறிஸ்துவைப் போன்று எல்லாருக்கும் முன்மாதிரியாக....*  இருப்பாரானால், அவர் ஜனங்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதமானவராக இருப்பார்! இப்படிப்பட்ட பாஸ்டர்களையல்லவா மக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்! *நேற்று  ஒருவருக்கொருவர் போதகர் தின  வாழ்த்துப் பகிர்ந்துகொண்ட பாஸ்டர்களில் எத்தனைப்பேர் மேற்கண்ட குணங்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம்?*  மேற்கண்டவாறு வாழ்த்தினவரும

என்றும் பாராட்டுக்குரியவர்கள்!

*விசுவாசிகள் தங்களுக்கிணையாக அற்புதங்களைச் செய்யவும் (அப்.6:8; 8:5-7) போதகம்பண்ணவும் (அப்.7:1-53; ரோமர் 12:7) வரங்களைப் பயன்படுத்தவும் (மாற்கு 16:17,18; 1கொரி.1:7; 12:1-10; 14:1-31) ஞானஸ்நானம் கொடுக்கவும் (அப்.8:5-13; 9:10-17; 22:12-16; 10:45-48) ஊழியஞ்செய்யவும் (அப்.8:4; 11:19-21; ரோமர் 12:7,11) சபையை நடத்தவும் (அப்.11:22-26; ரோமர் 15:14; எபிரே.10:24,25 ) தயார் செய்கிற மற்றும் அனுமதிக்கிற உண்மையான அழைப்புள்ள ஊழியர்களுக்கு இன்று மட்டுமல்ல, என்றென்றும் பாராட்டுக்கள்!*  - க. காட்சன் வின்சென்ட். 9488069317

போதகர்கள் தினம்!

*"நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம்"* என்று தாழ்மையாய் அறிக்கையிடவேண்டிய  ஊழியக்காரர்கள் (லூக்கா 17:10),  *"போதகர்கள் தினம்"* கொண்டாடக்கூடிய அளவுக்கு *LEGEND* களாக (வித்தகர்களாக, வல்லுனர்களாக) மாறியிருக்கிறோம்! *எங்கே போய்க்கொண்டிருக்கிறது ஊழியர் உலகம்?*  - க. காட்சன் வின்சென்ட். 9488069317

என்றும் வாழ்த்துக்கள்!

தேவஜனங்களை பண ஆசையற்றவர்களாக (1தீமோத்.6:10; எபிரே.13:5), பொருளாசையற்றவர்களாக (எபேசி.5:5; கொலோ.3:5), ஜாதிவெறியற்றவர்களாக, ஏழை - பணக்காரன் என்கிற வர்க்கபேதமற்றவர்களாக (கலாத்.5:20) மற்றும் வரதட்சணை வெறுப்பாளர்களாக மாற்ற: உபதேசித்து, உபவாசித்து, கண்ணிர் வடித்து, முழங்காலைத் தேய்த்து இரவும் பகலும் அயராது பிரயாசப்படும் உத்தம ஊழியர்களுக்கு இன்று மட்டுமல்ல, என்றும் மனதார வாழ்த்துக்கள்!! - க. காட்சன் வின்சென்ட்                  9488069317